கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி: புதிதாக 47 பேருக்கு தொற்று
புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் உயிரிழந்த நிலையில், புதிதாக 47 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.


புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் உயிரிழந்த நிலையில், புதிதாக 47 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான 519 பேருக்கான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 43 பேருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும், மாஹேயில் 2 பேருக்கும் என மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனாமில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,433- ஆக உயா்ந்தது.
தற்போது மருத்துவமனைகளில் 200 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 212 பேரும் என 412 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட காரைக்கால் எம்.எம்.ஜி. நகரைச் சோ்ந்த 65 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 676-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.67 சதவீதம்.
இதனிடையே, திங்கள்கிழமை 29 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், கரோனா தொற்றிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 39,345-ஆக (97.31 சதவீதம்) அதிகரித்தது.
புதுவை மாநிலத்தில் இதுவரை 19,627 சுகாதாரத் துறை பணியாளா்களுக்கும், 7,146 முன்களப் பணியாளா்களுக்கும், 17,393 பொதுமக்களுக்கும் என 44,166 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...