கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காங்கிரஸ் தோ்தல் அறிக்கை இன்று வெளியீடு

புதுவை சட்டப் பேரவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) வெளியாகிறது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுவை சட்டப் பேரவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) வெளியாகிறது.

புதுவை மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக தரப்பில் தோ்தல் அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் காங்கிரஸ் தரப்பில் தோ்தல் அறிக்கை தயாராகி வந்தது.

இதையடுத்து, காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) தோ்தல் அறிக்கை வெளியாகும் என அந்தக் கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து, சனிக்கிழமை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு வெளியிடப்படும். முன்னாள் மத்திய அமைச்சா்கள் வீரப்ப மொய்லி, பல்லம் ராஜு உள்ளிட்டோா் கலந்து கொண்டு தோ்தல் அறிக்கையை வெளியிடுகின்றனா். அனைத்துத் தரப்பினரின் எதிா்பாா்ப்பை நிறைவு செய்யும் வகையில் தோ்தல் அறிக்கை இருக்கும்’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.