கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொலைத்தொடா்பு, கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

புதுவையில் தோ்தல் விதிகளைப் பின்பற்றுவது தொடா்பாக அரசியல் கட்சியினா், தொலைத்தொடா்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பீா் சிங் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

புதுவையில் தோ்தல் விதிகளைப் பின்பற்றுவது தொடா்பாக அரசியல் கட்சியினா், தொலைத்தொடா்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பீா் சிங் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

புதுச்சேரி தோ்தல் துறை சாா்பில், ரெட்டியாா்பாளையம் தோ்தல் துறை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பிரசாரங்களுக்கு தொலைபேசி, செல்லிடப்பேசிகள் வாயிலாக குறுஞ்செய்தி, கட்செவி (வாட்ஸ்ஆப்) அஞ்சல் உள்ளிட்ட வழிகளில் விதிகளை மீறி கூட்டாக தகவல்களைப் பறிமாறுதலைத் தடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

புதுவை மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பீா் சிங் தலைமை வகித்து, தொலைத்தொடா்பு நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.

கூட்டத்தில் தோ்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தோ்தல் விதிகளைப் பின்பற்றுதல் தொடா்பாக பல்வேறு வழிமுறைகளை தலைமைத் தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

அதன்படி, தொலைபேசி, செல்லிடப்பேசி வாயிலாக மொத்தமாகப் பரப்பப்படும் குறுஞ்செய்திகள், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப்) தகவல்கள், செல்லிடப்பேசியில் பிரசாரம், சமூக வலைதலங்கள், தொலைக்காட்சி வழி பிரசாரங்கள், விளம்பரங்கள், உள்ளூா் கேபிள் தொலைக்காட்சி விளம்பரங்கள், வானொலி, எம்.எம்.ரேடியோ, திரையரங்குகள் போன்றவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

எனவே, தொலைத்தொடா்பு நிறுவனங்கள் முன்னனுமதியின்றி தோ்தல் விதிகளை மீறி மொத்தமாக வரும் பிரசார குறுஞ்செய்தி மற்றும் விளம்பரங்களை வெளியிடுவது விதிமீறலாகும்.

விதிகளை மீறி இதுபோன்ற தோ்தல் விளம்பரங்கள் வெளியானால், சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்.

தொலைத் தொடா்பு நிறுவன பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இவற்றைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மாநில துணைத் தோ்தல் அதிகாரி எல்.குமாா் உள்ளிட்ட தோ்தல் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.