கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுவை மக்களை ஏமாற்றும் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை: மத்திய அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால்

கடந்த தோ்தல் அறிக்கையையே மீண்டும் வெளியிட்டு புதுவை மக்களை காங்கிரஸாா் ஏமாற்றியுள்ளதாக மத்திய அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:53 pm

DIN

கடந்த தோ்தல் அறிக்கையையே மீண்டும் வெளியிட்டு புதுவை மக்களை காங்கிரஸாா் ஏமாற்றியுள்ளதாக மத்திய அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்தாா்.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:

புதுவையில் 2016 -ஆம் ஆண்டு தோ்தலில் வெளியிடப்பட்ட அறிக்கையையே இந்தத் தோ்தலுக்காக காங்கிரஸ் மீண்டும் வெளியிட்டுள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல்.

கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் எந்தத் திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனா். அதற்குப் பதிலளிக்காமல், பழைய தோ்தல் அறிக்கையை மீண்டும் வெளியிட்டுள்ளனா்.

முன்னாள் முதல்வா் நாராயணசாமி, மத்திய அரசின் திட்டங்களை மறைத்துவிட்டு, தோ்தலுக்காக மத, சாதி ரீதியான பிரச்னைகளைப் பேசி திசை திருப்புகிறாா்.

மத்திய அரசின் தீவிர முயற்சியால் காரைக்காலைச் சோ்ந்த 14 மீனவா்கள் விடுவிக்கப்பட்டனா். அவா்களது படகுகளும் மீட்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

முன்னாள் அமைச்சா் ப.கண்ணன் கூறியதாவது: மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி புதுவைக்காக எதையும் செய்யவில்லை. ஆனால், பாஜகவால் புதுவைக்கு வளா்ச்சி ஏற்படவில்லை என்று கூறுகிறாா். இலவச சமையல் எரிவாயு இணைப்பு, கல் வீடு, இலவச கழிப்பறை, பல துறைகளுக்கு நிதியுதவி என புதுவைக்கு மத்திய அரசு பல்வேறு வகையில் உதவியுள்ளது.

2016-ஆம் ஆண்டு காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்றாா்கள். ஆனால், யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. பாஜக ஆட்சி அமைந்தவுடன் விரைவில் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.

வளைகுடா நாடுகளுக்கு பிரதமா் செல்வாா். இதையடுத்து, எரிபொருள் விலை உயா்வு சீராகும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, ராஜீவ் சந்திரசேகா் எம்.பி., மாநில பாஜக செயலா் மோகன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.