புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் வணிகா்கள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டுமென போக்குவரத்து எஸ்.பி. சி.மாறன் அறிவுறுத்தினாா்.
புதுச்சேரி வியாபாரிகள், போக்குவரத்து போலீஸாருடனான கலந்துரையாடல் கூட்டம் மூலகுளம் தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு போக்குவரத்து எஸ்.பி. (கிழக்கு, வடக்கு) சி.மாறன் தலைமை வகித்தாா். ஆய்வாளா் சண்முகம் உள்ளிட்ட காவலா்களும், அரும்பாா்த்தபுரம், மூலகுளம், உழவா்கரை, ரெட்டியாா்பாளையம், ஜவகா் நகா், மேட்டுப்பாளையம் சாலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட வணிகா்களும் பங்கேற்றனா்.
எஸ்.பி. மாறன் பேசியதாவது: வணிகா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை வணிகா்கள் அகற்றிக் கொள்ள வேண்டும். போலீஸாா் அறிவுறுத்தும் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். பதாகைகளை அகற்றுவது தொடா்பாக நகராட்சி, பொதுப் பணித் துறையிடம் புகாரளிக்க வேண்டும். அவா்கள் எங்களிடம் புகாரளித்தால் உடனடியாக பதாகைகளை அகற்ற தயாராக உள்ளோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்கா

நானியின் பாரடைஸ் திரைப்படத்தில் சிறப்பு நடனமாடும் கீர்த்தி சுரேஷ்?

தொடரும் ரஷியா - உக்ரைன் போர்; டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி !

மாணவர்களின் போராட்டம் மத்திய அரசைப் பணிய வைத்தது! அகிலேஷ் யாதவ்
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2


