கிறிஸ்துமஸ் பண்டிகை: புதுச்சேரி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி 

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைத்து  தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகை: புதுச்சேரி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி 

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் வெளிநாட்டினர் உள்பட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி இயேசு பிறப்பு பெருவிழா கிறிஸ்துமஸ் பண்டியகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதனையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனை  நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கடற்கரை சாலையில் உள்ள கப்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

பின்னர் குழந்தை ஏசுவின் சொரூபம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு குடிலில் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதே போல் நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள பழமைவாய்ந்த புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேராலயத்தில் இன்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 

இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

பின்னர் பேராயர் குழந்தை ஏசு சொரூபத்தை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த குடிலில் வைதத்தார். இதையடுத்து 12.01 மணிக்கு பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்துவர்கள் தங்களது அருகில் இருந்தவர்களுக்கு, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கைகளை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com