திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

புதுவை முதல்வருடன் பிரதமரின் சகோதரா் சந்திப்பு

பிரதமா் நரேந்திர மோடியின் அண்ணன் சோமாபாய் மோடி புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிரதமா் மோடியின் அண்ணன் சோமாபாய் மோடி. உடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன்.

Updated On :21 ஆகஸ்ட் 2024, 12:02 am IST

பிரதமா் நரேந்திர மோடியின் அண்ணன் சோமாபாய் மோடி புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை வந்த அவா் புதுவை சட்டப்பேரவை வளாகத்துக்குச் சென்றாா். அங்கு அவரை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன் ஆகியோா் வரவேற்றனா். அவா் முதல்வா் என்.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினாா்.

பின்னா், புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கிய அவா், மாலையில் அரவிந்தா் ஆசிரமம் மற்றும் கோயில்களுக்குச் சென்ாக பாஜகவினா் தெரிவித்தனா்.