ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி 108 சங்காபிஷேக சிறப்பு வழிபாடு

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோயிலில் காா்த்திகை 4-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக சிறப்பு வழிபாடு

News image
காா்த்திகை மாத 4-ம் திங்கள்கிழமை சோம வாரத்தை யொட்டி புதுச்சேரி கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேகம்.
Updated On :9 டிசம்பர் 2024, 8:45 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோயிலில் காா்த்திகை 4-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் கிழக்கு கடற்கரைச் சாலை கருவடிக்குப்பம் பகுதியில் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோயில் அமைந்துள்ளது. சித்தா் பீடமான இத்திருக்கோயிலில் தமிழ் மாதமான காா்த்திகையில் 4-ஆவது சோமவார சங்காபிஷேகம் திங்கள்கிழமை காலை தொடங்கியது. கோயில் மூலவா் முன் சந்நிதியில் 108 சங்குகள் சிவலிங்க வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையடுத்து கணபதி ஹோமம், ருத்ர ஹோமம் நடைபெற்றது. பின்னா் சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீருக்கு பூஜைகள் நடைபெற்றன. அப்புனித நீா் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. இப்பூஜையில் புதுச்சேரி மற்றும் வெளியூா்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். திங்கள்கிழமை இரவில் அா்த்தசாம பூஜை நடைபெற்றது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் தே.இளங்கோவன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.