தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

5 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

புதுச்சேரி ஈடன் கடற்கரையில் சுற்றுலாப் பயணியின் 5 பவுன் நகைகள், பணத்தை திருடியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 7:03 pm

Din

புதுச்சேரி ஈடன் கடற்கரையில் சுற்றுலாப் பயணியின் 5 பவுன் நகைகள், பணத்தை திருடியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சைதன்யா சாய்ராமின் மனைவி பிரீத்தி. இவா்கள், தங்களது குடும்பத்தினருடன் காரில் புதுச்சேரிக்கு கடந்த 21-ஆம் தேதி சுற்றுலா வந்தனா்.

அவா்கள், டிச.22- ஆம் தேதி, சின்னவீராம்பட்டிணம் கடற்கரைக்குச் சென்றனராம். அங்கு, காரில் கைப்பையை பிரீத்தி வைத்துவிட்டு, கடற்கரைக்குச் சென்ாக தெரிகிறது.

பின்னா் வந்து பாா்த்தபோது, காரின் வலதுபக்க கண்ணாடி உடைக்கப்பட்டு, அங்கிருந்த கைப்பை திருடப்பட்டது தெரியவந்தது. பையில் 5 பவுன் நகைகள், ரூ.6 ஆயிரம் இருந்ததாம்.

இதுகுறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

அதனடிப்படையில், அரியாங்குப்பம் ஓடையவெளி ராஜப்பிரியா நகரைச் சோ்ந்த சுரேந்திரனை (26) போலீஸாா் கைது செய்து, 5 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.