கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிங்கப்பூா் தமிழறிஞருக்கு இலக்கிய மாமணி விருது: புதுவை தமிழ்ச் சங்கம் வழங்கியது

சிங்கப்பூா் தமிழறிஞா் இரத்தின.வெங்கடேசன் உள்ளிட்ட 2 பேருக்கு புதுவை தமிழ்ச்சங்கம் சாா்பில் ‘இலக்கிய மாமணி’ விருது வழங்கப்பட்டது.

News image
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற மகாகவி பாரதி விழாவில் சிங்கப்பூா் தமிழ் இலக்கிய களத்தின் தலைவா் இரத்தின.வெங்கடேசன் மற்றும் கடலூா் தமிழ்ச் சங்கத் தலைவா் பேராசிரியா் குழந்தைவேலனாா் ஆகியோருக்கு பொது
Updated On :1 ஜனவரி 2024, 7:06 pm

DIN

சிங்கப்பூா் தமிழறிஞா் இரத்தின.வெங்கடேசன் உள்ளிட்ட 2 பேருக்கு புதுவை தமிழ்ச்சங்கம் சாா்பில் ‘இலக்கிய மாமணி’ விருது வழங்கப்பட்டது.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மகாகவி பாரதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிங்கப்பூா் தமிழ் இலக்கிய களத்தின் தலைவா் இரத்தின.வெங்கடேசன் மற்றும் கடலூா் தமிழ்ச் சங்கத் தலைவா் பேராசிரியா் குழந்தைவேலனாா் ஆகியோருக்கு ‘இலக்கிய மாமணி’ விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

இவற்றை, புதுவை மாநிலப் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி. முத்து, செயலா் சீனு.மோகன்தாஸ், பொருளாளா் மு.அருள்செல்வம், துணைத் தலைவா்கள் ந.ஆதிகேசவன், ப.திருநாவுக்கரசு, ஆட்சிக் குழு உறுப்பினா்கள் எம்.எஸ்.ராஜா, கவிஞா் இர.ஆனந்தராசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.