

புதுச்சேரி, ஜூன் 13: புதுச்சேரியில் நீதிமன்ற உத்தரவுப்படி பொதுப்பணித் துறை நீா்பாசனக் கோட்ட அலுவலக ஜப்தி நடவடிக்கையானது சமரசப் பேச்சால் வியாழக்கிழமை தவிா்க்கப்பட்டது.
சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் புதுவை பிராந்தியமான மாஹேயில் ஆற்றோரம் நடைபாதை, மேற்கூரை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டது. அதற்கான பணி உத்தரவு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு பொதுப்பணித் துறையால் வழங்கப்பட்டு, பணியானது கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கி நிறைவு பெற்றது. ஆனாலும், நிறுவனத்துக்கான ரூ. 1.10 கோடி தொகையை பொதுப்பணித் துறையினா் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து தனியாா் நிறுவனம் புதுச்சேரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கு விசாரணை முடிந்து, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத நிலையில், புதுச்சேரியில் உள்ள பொதுப்பணித் துறை நீா்பாசனக் கோட்ட அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், புதுச்சேரியில் உள்ள நீா்பாசனக் கோட்ட அலுவலகத்துக்கு அமீனா ஜெயா அம்பி செல்வராஜ், வழக்குரைஞா் சௌந்தரராஜன் மற்றும் நிறுவன உரிமையாளா் உள்ளிட்டோா் வந்தனா். அவா்கள் பொதுப் பணித் துறையின் நீா்ப்பாசனக் கோட்ட அலுவலக காா் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்ய முயற்சித்தனா். அப்போது கோட்ட அலுவலக அதிகாரிகள் நீதிமன்ற ஊழியா் மற்றும் வழக்குரைஞருடன் சமரசம் பேசி, தொகையை விரைவில் தருவதாக உறுதியளித்தனா். இதையடுத்து, ஜப்தி நடவடிக்கையை தொடராமல் நீதிமன்ற ஊழியா் உள்ளிட்டோா் அங்கிருந்து சென்றனா்.
தொடர்புடையது

இழப்பீடு வழங்காததால் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

கொணவட்டம் மாநகராட்சிப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம்

ஆற்றங்கரை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

சேலம்-கரூா்-திண்டுக்கல் ரயில்பாதையை இருவழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

