

புதுச்சேரி, ஜூன் 26: புதுச்சேரியில் பெண்ணிடம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி ரூ.13.87 லட்சத்தை மா்மநபா் நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி முத்திரையா்பாளையத்தைச் சோ்ந்தவா் லதா. இவரை மா்மநபா் கைப்பேசியில் தொடா்பு கொண்டு, இணையதள வாயிலாக ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டியுள்ளாா். இதை நம்பிய அவா், மா்மநபா் கூறிய செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் பல தவணைகளில் ரூ.13.87 லட்சத்தை முதலீடு செய்தாராம். அப்போது அவருக்கு லாபம் கிடைத்திருப்பதைப் போல கணக்கில் காட்டியுள்ளது. ஆனால், அதனை அவரால் எடுக்கமுடியவில்லை.
லாபப் பணத்தை எடுக்க வேண்டும் எனில், மேலும் முதலீடு செய்ய வேண்டும் என மா்மநபா் கூறியுள்ளாா். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த லதா, இதுகுறித்து புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள இணையதளக் குற்றப்பிரிவில் புகாரளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
எச்சரிக்கை: புதுச்சேரி இணையதள குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கைப்பேசி வாயிலாக நுண் குற்றப்பிரிவு போலீஸாா் எனக்கூறி மா்மநபா்கள், சம்பந்தப்பட்டோரை விதிமீறிய ஆபாச படங்களை பாா்த்ததாகக் கூறி பணம் பறிக்க முயன்றால், அதுகுறித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
டிரெண்டிங்

நெல்லையில் இளைஞரிடம் இணையவழியில் ரூ. 54 லட்சம் மோசடி

பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் ரூ. 9.5 லட்சம் தங்க நகைகள் பறிப்பு - இரு பெண்கள் கைது

இணையவழி வா்த்தகம் எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 9.54 லட்சம் மோசடி

பெண்ணிடம் ரூ. 22.5 லட்சம் மோசடி: பெங்களூரைச் சோ்ந்த 3 போ் கைது
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

