போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக் கோரி, புதுச்சேரி அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினா்.
போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தக் கோரி, புதுச்சேரி அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினா்.

புதுச்சேரியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழகம், புதுவையில் போதைப் பொருள் விநியோகம் அதிகரித்திருப்பதை மாநில அரசுகள் தடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

புதுச்சேரி: புதுச்சேரியில் போதைப் பொருள் குற்றங்களைத் தடுக்க வலியுறுத்தி அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம், புதுவையில் போதைப் பொருள் விநியோகம் அதிகரித்திருப்பதை மாநில அரசுகள் தடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அதிமுக மாநில செயலாளா் ஆ.அன்பழகன் பேசியதாவது: தமிழகத்தைப் போலவே புதுவை மாநிலத்திலும் போதைப் பொருள்கள் அதிகளவில் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால், போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பதில் புதுவை என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஆகவே, புதுவையில் போா்க்கால அடிப்படையில் போதை பொருள் குற்றங்களை தடுக்கவேண்டியது அவசியம் என்றாா். ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com