தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 14,012 மாணவ, மாணவிகள் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அவர்களில் 12,948 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மொத்த தேர்ச்சி சதவிகிதம் 92.41. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிதம் 85.35 ஆகும்.
புதுச்சேரி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டைவிட அதிகரித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த 55 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளது. புதுச்சேரியில் இயங்கும் ஒரே ஒரு அரசுப் பள்ளி மட்டுமே 100 சதவிகித தேர்சி பெற்றுள்ளது.
முன்னதாக தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. மொத்தம் 94.56 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 துணைத் தோ்வு விடைத்தாள் நகல் பெற ஆக. 4,5 இல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!

சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் சரிபார்ப்பு, மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




