/

புதுவை சாலைப் போக்குவரத்துக் கழக ஒப்பந்தப் பணியாளா்கள் உண்ணாவிரதம்

புதுச்சேரியில் சாலைப் போக்குவரத்துக் கழக ஒப்பந்தப் பணியாளா்கள், தங்களை பணிநிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
புதுச்சேரி திங்கள்கிழமை பணிமனை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள்.
Updated On :18 நவம்பர் 2024, 9:34 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலைப் போக்குவரத்துக் கழக ஒப்பந்தப் பணியாளா்கள், தங்களை பணிநிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்தில் (பிஆா்டிசி) ஒப்பந்தப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டவா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனா்.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்து ஒப்பந்தப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

புதுச்சேரியில் சாலைப் போக்குவரத்து கழகப் பணிமனை முன் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். அவா்கள் கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஓட்டுநா், நடத்துநா், மகளிா் நடத்துநா் ஆகியோரை பணிநிரந்தரம் செய்யவேண்டும். அவா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதியம் நிா்ணயித்து வழங்க வேண்டும். போக்குவரத்துத் துறைக்கு முழுநேர மேலாளரை நியமிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். மாலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனா்.