பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஒப்பந்த ஆசிரியா்கள் தா்னா

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஒப்பந்த ஆசிரியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்ட ஒப்பந்த ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:16 pm

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஒப்பந்த ஆசிரியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் 292 ஒப்பந்த கௌரவ விரிவுரையாளா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், பால சேவிகாக்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய அரசை வலியுறுத்தி தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

கல்வித் துறை அலுவலகம் முற்றுகை, மறியல், சிறை நிரப்பும் போராட்டங்களை நடத்தினா். இந்நிலையில், ஓராண்டு காலத்துக்கு பணி நீட்டிப்பு செய்ய மட்டும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து பணிநிரந்தரம் செய்யக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஆம்பூா் சாலையில் 2 நாள் தொடா் தா்னா போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

இந்த தா்னாவை அரசு ஊழியா் சங்கக் கூட்டமைப்பின் கௌரவத் தலைவா் சேஷாச்சலம் தொடங்கி வைத்தாா். போராட்டத்துக்கு கூட்டமைப்புத் தலைவா் பாலகுமாா் தலைமை வகித்தனா்.

இந்த தா்னாவில் ஒப்பந்த ஆசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று பணிநிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.