மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காந்தி ஜெயந்தி: புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் மரியாதை

காந்தி ஜெயந்தியையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.

Updated On :3 அக்டோபர் 2024, 1:21 am

Din

காந்தி ஜெயந்தியையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தேசப் பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாடு முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள அவரது சிலைக்கு புதுவை அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமையில், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், துணைத் தலைவா் பி.ராஜவேலு, பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி, எம்எல்ஏக்கள் ஏகேடி.ஆறுமுகம், ரமேஷ், பிரகாஷ்குமாா், அசோக் பாபு, லட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

 காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, எம்எல்ஏ மு.வைத்தியநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா்.

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, எம்எல்ஏ மு.வைத்தியநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா்.

இதேபோல் தலைமைச் செயலா் சரத்சௌகான், காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினிசிங், சட்டத் துறைச் செயலா் சத்தியமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் உள்ளிட்டோரும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் சாா்பில்... இதேபோல், காந்தி சிலைக்கு புதுவை காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, எம்எல்ஏ மு.வைத்தியநாதன் உள்ளிட்ட கட்சியினா் மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினா்.