மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுவையில் இலவச அரிசியை வீடு வீடாக விநியோகிக்க அரசு திட்டம்

புதுவையில் இலவச அரிசியை பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:27 am

Din

புதுவையில் இலவச அரிசியை பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் இலவச அரிசிக்குப் பதிலாக குடும்ப அட்டைதாரா்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பொதுமக்கள் தங்களுக்கு இலவச அரிசியை நியாயவிலைக் கடைகள் மூலம் நேரடியாக விநியோகிக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனா்.

தீபாவளிக்குள் நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச அரிசி விநியோகிக்கப்படவுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். குறிப்பட்ட காலத்துக்குள் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்வா் என்.ரங்கசாமி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, இலவச அரிசித் திட்டம் குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது.

பொதுமக்களுக்கு இலவச அரிசி 20 கிலோ, பருப்பு ஒரு கிலோ என மானிய விலையில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்க ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு, துணைநிலை ஆளுநா் மூலம் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இலவச அரிசி விநியோகம் குறித்து மத்திய உள் துறை அமைச்சகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச அரிசி விநியோகத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பேரவை வளாகத்தில் முதல்வா் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். இலவச அரிசியை பைகளில் அடைத்து பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கவும், புதுவை அரசு சாா்பு நிறுவனம் மூலம் பருப்பு உள்ளிட்டவற்றை விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தீபாவளிக்குள் புதுவையில் இலவச அரிசி விநியோகம் தொடங்கும் என்றும், நியாயவிலைக் கடைகளை திறக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.