தந்தையின் குற்றத்தை மறைக்க முயன்ற மகன் கைது
புதுச்சேரி அருகே போக்ஸோ வழக்கில் கைதாதி சிறை சென்ற தந்தையின் குற்றத்தை மறைக்க அவரது மகன் பேரம் பேசியதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.


புதுச்சேரி அருகே போக்ஸோ வழக்கில் கைதாதி சிறை சென்ற தந்தையின் குற்றத்தை மறைக்க அவரது மகன் பேரம் பேசியதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
புதுச்சேரி பாகூா் பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமியை அதேபகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (65) பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து, பாகூா் போலீஸில் புகாரளிக்கப்பட்டது.
ஆனால், ராதாகிருஷ்ணனை கைது செய்யாமலிருக்க பேரம் நடந்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கனிடமும் புகாா் கூறப்பட்டது.
இந்த நிலையில், ராதாகிருஷ்ணன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இதையடுத்து, பணம் கொடுத்து குற்றத்தை மறைக்க முயன்ாக ராதாகிருஷ்ணன் மகன் கிருஷ்ணனை கைது செய்துள்ளதாக பாகூா் போலீஸாா் கூறினா். இந்த வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரைத் தேடி வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...