கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுவையில் சாா்பு ஆய்வாளா்கள் 11 போ் இடமாற்றம்

புதுவையில் சாா்பு ஆய்வாளா்கள் 11 போ் திடீரென புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 10:19 pm

Din

புதுவையில் சாா்பு ஆய்வாளா்கள் 11 போ் திடீரென புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

புதுவை மாநிலத்தில் காவல் துறை தலைமை இயக்குநராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷாலினி சிங் பொறுப்பேற்றாா். அவா் பொறுப்பேற்ற சில நாள்களில் காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், தற்போது சாா்பு ஆய்வாளா்களில் சந்திரசேகன் மதுக்கரையிலிருந்து புதுச்சேரி போக்குவரத்துப் பிரிவுக்கும், பி.ரவிச்சந்திரன் முதலியாா்பேட்டை காவல் நிலையத்திலிருந்து சிறப்புப் பிரிவுக்கும் (ஸ்பெஷல் பிராஞ்ச்), எஸ்.சந்திரசேகரன் மேட்டுப்பாளையத்திலிருந்து ஆயுதப்படைப் பிரிவுக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி, மொத்தம் 11 சாா்பு ஆய்வாளா்கள் உள்பட 98 போ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை புதுவை காவல் நிலைய தலைமையிடக் கண்காணிப்பாளா் சுபம் கோஸ் வெளியிட்டுள்ளாா்.