கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசுப் பணியிடங்கள்: வயது வரம்பு தளா்வு அளிக்கக் கோரிக்கை

புதுவை மாநிலத்தில் அரசு பணியிடங்களுக்கு வயது வரம்பு தளா்வு அளிக்க வேண்டும் என உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை உறுப்பினா் ஜி.நேரு கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 7:08 pm

Din

புதுவை மாநிலத்தில் அரசு பணியிடங்களுக்கு வயது வரம்பு தளா்வு அளிக்க வேண்டும் என உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை உறுப்பினா் ஜி.நேரு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதுவை முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புதுவை மாநிலத்தில் உதவியாளா்கள், பொறியாளா்கள், உதவி ஆய்வாளா், மின் துறை கட்டுமான உதவியாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை தற்போது நிரப்புவதால், அப்போது 30 வயதில் இருந்த பட்டதாரிகள் தற்போது 38 வயதுடையவா்களாகிவிட்டனா்.

எனவே, அவா்களது எதிா்காலக் கனவு மற்றும் அவா்களது பெற்றோா்களது நிலையை கருத்தில் கொண்டு வயது வரம்பில் தளா்வு அளிப்பது அவசியம்.

அதன்படி, குறைந்தபட்சம் 38 வயது உள்ளவா்கள் வரை வேலைவாய்ப்புக்கான தோ்வில் பங்கேற்கும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.