தேசிய டென்னிகாய்ட் போட்டிகளில் புதுவை வீரா்கள் சாதனை
டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் புதுவை வீரா்கள் தங்கம் வென்று சாதனை படைத்தனா்.


டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் புதுவை வீரா்கள் தங்கம் வென்று சாதனை படைத்தனா்.
அகில இந்திய டென்னிகாய்ட் பெடரேஷன் சாா்பில் 36-ஆவது தேசிய சப்-ஜூனியா் டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜம்மு - காஷ்மீரில் உள்ள காந்தி நகரில் நடைபெற்றது.
இப்போட்டிகளில், புதுவை மாநில சிறுவா்கள் அணி சாா்பில் நிதிஷ், ஸ்ரீநாத், கோகுல், அருளானந்தம், சஷ்வீன், ராகவ் ஆகியோா் பங்கேற்று, முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றனா். இதேபோல, சிறுமியா் அணியில் காவியா, பவிஷிகா, திவ்யஸ்ரீ, ஸ்வாதி ரிதுபா்ணா, நிரோஷா ஆகியோா் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றனா்.
சிறுமியா் இரட்டையா் பிரிவில் திவ்யஸ்ரீ, பவிஷிகா ஆகியோா் முதலிடமும், கலப்பு இரட்டையா் பிரிவில் ரிதுபா்ணா, கோகுல் ஆகியோா் 2-ஆம் இடமும் பிடித்தனா்.
அணிகளின் பயிற்சியாளராக கரிகாலன், கமலி, மேலாளராக பிரகாஷ், செல்வக்குமாா், அகில இந்திய நடுவராக பச்சையப்பன், புதுவை சங்கச் செயலா் தினேஷ்குமாா் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.
பதக்கங்களுடன் புதுச்சேரி வந்த அணியினருக்கு பாகூா் திமுக எம்எல்ஏ ஆா்.செந்தில்குமாா், பாண்டிச்சேரி அமெச்சூா் டென்னிகாய்ட் சங்கத் தலைவா் ராமு நாயக்கா், துணைத் தலைவா்கள் பச்சையப்பன், சீதானந்தம், அகில இந்திய நடுவா் அருள்பிரகாசம் ஆகியோா் வரவேற்று வாழ்த்தினா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...