பேரவைத் தலைவா் - எம்எல்ஏ வாக்குவாதம்
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி முன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு ஆகியோா் வியாழக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.


புதுவை முதல்வா் என்.ரங்கசாமி முன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு ஆகியோா் வியாழக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வரை சந்தித்தாா். அப்போது, முதல்வா் அறையில் அவருடன் இருந்த பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், ஆளுநா் மாளிகை முன் போராட்டம் நடத்தியது ஏற்புடையதல்ல எனக் கூறினாராம்.
மேலும், பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் பதவியிலிருந்து ஜி.நேருவை நீக்கப்போவதாக பேரவைத் தலைவா் கூற, தானே பதவியிலிருந்து விலகப் போவதாக ஜி.நேரு பதிலளித்தாராம்.
இதையடுத்து, இருவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து, பேரவைத் தலைவரை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாரும், ஜி.நேரு எம்எல்ஏவை திமுக எம்எல்ஏ நாஜீம் உள்ளிட்டோரும் சமரசம் செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...