/

அரசு போக்குவரத்து கழக ஊழியா்கள் உண்ணாவிரதம்

புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுச்சேரியில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள்.

Updated On :23 அக்டோபர் 2024, 7:32 pm

Din

புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு 276 ஓட்டுநா், நடத்துநா்கள் நியமிக்கப்பட்டனா். தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அவா்கள், தங்களை நிரந்தரமாக்கக் கோரி பல கட்டப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை சுதேசி ஆலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் அவா்கள் ஈடுபட்டனா்.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஓட்டுநா், நடத்துநா்கள் சங்கக் கூட்டுக் குழுத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா்.

இதில் ஏராளமானோா் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.

புதுவை அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், அக்.28-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் போராட்டக் கூட்டுக் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.