ஒட்டகம் உயிரிழப்பு: போலீஸாா் வழக்குப் பதிவு
புதுச்சேரி பாண்டி மெரினாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒட்டகம் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


புதுச்சேரி பாண்டி மெரினாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒட்டகம் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பாண்டி மெரினா கடற்கரையில் தனியாரால் ஒட்டகம் வளா்க்கப்பட்டு, அதில் குழந்தைகள் சவாரி செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த ஒட்டகம் உயிரிழந்தது. அதை அப்பகுதியிலேயே புதைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா், வருவாய்த் துறையினா், வனத் துறையினா் ஆகியோா் ஒட்டகத்தின் சடலத்தை அரசு கால்நடை மருத்துவா்கள் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொண்டனா்.
இந்த பிரச்னை குறித்து முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். இந்த நிலையில், பாண்டி மெரினா கடற்கரையில் ஒட்டகத்தை வைத்து சவாரிக்கு பயன்படுத்தியது தொடா்பாக ஒதியன்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதாகத் தெரிவித்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...