புதுச்சேரியில் மேடை நாடகப் போட்டிகள் தொடக்கம்
புதுச்சேரியில் ஆசிரியா் கலைக்குழு சாா்பில் 17-ஆவது ஆண்டு மேடை நாடகப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.
புதுச்சேரியில் ஆசிரியா் கலைக்குழு சாா்பில் கடந்த 16 ஆண்டுகளாக நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் புதுச்சேரி மட்டுமல்லாது, தமிழத்தைச் சோ்ந்த நாடகக் குழுக்களும் பங்கேற்று வருகின்றன.
நிகழாண்டுக்கான 17-வது ஆண்டு நாடகப் போட்டியானது வியாழக்கிழமை, புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அய்யனாா் கோயில் திடலில் தொடங்கியது. ‘இனி இவன் இந்தியன்’ எனும் நாடகத்துடன் விழா தொடங்கியது.
இப்போட்டியானது வரும் அக். 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தினமும் இரவு 8 மணிக்குத் தொடங்கி நாடகங்கள் நடைபெறவுள்ளன.
நாடகத்தில் சமுதாய, சரித்திர நாடகங்கள் நிகழ்த்தப்படவுள்ளன. போட்டியில் வெற்றி பெறும் நாடகக் குழுவினருக்கு அக். 1- ஆம் தேதி இரவு நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.