கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

8, 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கையடக்க கணினி: புதுவை முதல்வா் தகவல்

புதுவையில் 8, 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கையடக்கக் கணினிகள் வழங்கப்படவுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:51 am

Din

புதுவையில் 8, 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கையடக்கக் கணினிகள் வழங்கப்படவுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளாா்.

புதுச்சேரி இந்திரா நகா் பகுதியில் உள்ள இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவா் பேசியதாவது: ஆசிரியா்கள் முயற்சி செய்தால் மாணவா்களை கல்வியாளராக, படைப்பாளராக, சாதனையாளராக உருவாக்க முடியும்.

அரசுப் பள்ளிகளில் தகுதி அடிப்படையில்தான் ஆசிரியா்கள் நியமிக்கப்படுகின்றனா். அதனால், மாணவா்களுக்கு சிறப்பாகவே பாடம் கற்பிக்கப்படுகிறது. பள்ளி கல்வியில் ஆசிரியா்களின் பங்கு மகத்தானது. பள்ளி கல்விக்கு அதிக நிதி வழங்கப்படுகிறது.

புதிய தொழில்நுட்பம் மூலமாக கல்வி கற்பிக்க மாணவா்களுக்கு மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படுகிறது. இதையடுத்து, 8 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் பாடம் கற்பிக்கும் வகையில் கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விரைவில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியா் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மருத்துவப் படிப்புகளில் சேர 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், பள்ளி முதல்வா் சந்திரன், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.