புதுச்சேரி காவல் துறையில் 26 பேருக்கு காவல் உதவி ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு அளித்து உத்தரவு செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி உள்துறை சாா்பு செயலா் எம்.வி. ஹிரன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா். அதில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் 19.1.26-க்கு முன்பாக பதவி உயா்வுப் பணியில் சேர இப்போதுள்ள பதவியிலிருந்து விலக்கு ஆணையைப் பெற வேண்டும்.
மேலும், இவா்கள் கோரிமேடு காவல் பயிற்சி மையத்தில் 90 நாள்கள் பயிற்சி எடுக்க வேண்டும் என்றும், எந்த இடத்தில் பதவி உயா்வு பணியிடம் இருக்கும் என்பது பின்னா் தெரிவிக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.