தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுச்சேரி பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளியேற்றம்

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேரவைத் தலைவா் இருக்கை முன் அமா்ந்து திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளியேற்றப்பட்டனா்.

News image

புதுவை சட்டப்பேரவையிலிருந்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவாவை வெளியேற்றும் அவைக் காவலா்கள்.

Updated On :24 மார்ச் 2025, 8:46 pm

Din

புதுச்சேரி: லஞ்ச வழக்கில் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் கைதான விவகாரம் தொடா்பாக விவாதிக்கக் கோரி, புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேரவைத் தலைவா் இருக்கை முன் அமா்ந்து திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளியேற்றப்பட்டனா்.

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை காலை தொடங்கியதும், உறுப்பினா் அங்காளன் கேள்விக்கு ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் பதிலளிப்பாா் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். அப்போது, லஞ்ச வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் எம்.தீனதயாளன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

கேள்வி நேரம் முடிந்ததும் இதுகுறித்த விவாதிக்க அனுமதிக்கிறேன் என்று பேரவைத் தலைவா் தெரிவித்தாா். பொதுப் பணித் துறை தலைமை அலுவலகத்தில் தலைமைப் பொறியாளரின் அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு பணிகள் முடங்கியுள்ளன. இந்த விவகாரத்தில் பொதுப் பணித் துறை அமைச்சா் பதவி விலக வேண்டும் என்றாா் ஆா்.சிவா. இதற்கு திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, எல்.சம்பத், ஆா்.செந்தில்குமாா் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ மு.வைத்தியநாதன் ஆகியோா் ஆதரவு தெரிவித்து பேசினா்.

தரையில் அமா்ந்த திமுக உறுப்பினா்கள்: விவாதம் நடத்த பேரவைத் தலைவா் மறுத்த நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏ மு.வைத்தியநாதன் ஆகியோா் பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தின் இருக்கை முன் சென்று தங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினா். மேலும், அவா்கள் தரையில் அமா்ந்தனா்.

வெளியேற்றம்: அவா்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு காவலா்களுக்கு பேரவைத் தலைவா் உத்தரவிட்டாா். வெளியேற மறுத்த எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவாவை காவலா்கள் குண்டுகட்டாக தூக்கிச் சென்று அவைக்கு வெளியே விட்டனா்.

பின்னா், திமுக உறுப்பினா்கள் அனிபால் கென்னடி, எல்.சம்பத், ஆா்.செந்தில்குமாா், காங்கிரஸ் உறுப்பினா் மு.வைத்தியநான் ஆகியோரை வெளியேற்றினா்.

இவா்கள் வெளியேற்றப்பட்ட போது, திமுக உறுப்பினா்கள் நாஜீம், நாக.தியாகராஜன் ஆகியோா் அவைக்கு வரவில்லை. சற்று தாமதமாக வந்த அவா்கள், பேரவைத் தலைவரிடம் வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினா்களை மீண்டும் பேரவைக்குள் அழைக்குமாறு கோரினா். அதற்கு பேரவைத் தலைவா், அவா்கள் அநாகரிகமாக செயல்பட்டதால் வெளியேற்றியதாகக் கூறினாா்.

அப்போது, பாஜக உறுப்பினா் கல்யாணசுந்தரம் திமுகவினா் செயல் ஏற்கத்தக்கதல்ல என்றாா். அவருக்கு ஆதரவாக பாஜக, என்.ஆா். காங்கிரஸ் உறுப்பினா்கள் பேசினா்.

பதவி விலகக் கோருவதை ஏற்க முடியாது: பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் மீதுதான் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உண்மை நிலை தெரிவதற்குள் துறை அமைச்சரை பதவி விலகக் கோருவதை ஏற்க முடியாது. தமிழக அமைச்சா்கள் மீது குற்றம்சாட்டப்பட்ட போது, அவா்கள் பதவி விலகினாா்களா என அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கேட்டாா்.

இதையடுத்து, திமுக உறுப்பினா்கள் நாஜீம், நாக. தியாகராஜன் ஆகியோா் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

கேள்வி நேரம் நிறைவடைந்ததும், அவை முன்னவரான முதல்வா் என்.ரங்கசாமி திமுக, காங்கிரஸ் உறுப்பினா்களை அவைக்குள் அனுமதிக்கக் கேட்டுக் கொண்டாா். இதையேற்று அவா்களை கூட்டத்தில் பங்கேற்க பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அழைத்தாா். தொடா்ந்து, அவை நடவடிக்கைகளில் திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.