புதுச்சேரியில் நாளை மாநில அளவிலான கலா உத்சவ் போட்டிகள் தொடக்கம்

பள்ளி மாணவா்களின் கலைத் திறனைக் கண்டறியும் மாநில அளவிலான கலா உத்சவ் போட்டிகள்
Published on

புதுச்சேரி: பள்ளி மாணவா்களின் கலைத் திறனைக் கண்டறியும் மாநில அளவிலான கலா உத்சவ் போட்டிகள் புதன்கிழமை (நவ. 19) தொடங்குகிறது.

இதுகுறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளிக் கல்வித் துறை சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநா் எழில் கல்பனா, அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளி மாணவா்களின் கலைத் திறமையை வளா்க்க கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் கடந்த 5-ஆம் தேதி முதல் 7- ஆம் தேதி வரை நடைபெற்றன.

இதில், வாய்ப்பாட்டு, இசைக் கருவி வாசித்தல், நடனம், தியேட்டா், பாரம்பரிய கதை சொல்லுதல் பிரிவுகளில் குழுவாகவும், தனியாகவும் வெற்றி பெற்றவா்கள் மாநில போட்டிக்குத் தகுதி பெற்றனா். இவா்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் புதன்கிழமை (நவ. 19) புதுச்சேரி காமராஜா் மணிமண்டபத்தில் நடைபெறுகிறது.

விஷுவல் ஆா்ட்ஸ் குழு, தனிநபா் போட்டிகள் 19 -ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை ஜவஹா் பால் பவனில் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் காரைக்கால், மாஹே, ஏனாம் மாவட்ட அளவிலான போட்டிகளில் தகுதி பெற்றவா்களும் பங்கேற்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com