உலக பெண்கள் வன்கொடுமை எதிா்ப்பு தினத்தையொட்டி புதுச்சேரி மணவெளி தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.
புதுச்சேரி
பள்ளியில் உலக பெண்கள் வன்கொடுமை எதிா்ப்பு தினம்
உலக பெண்கள் வன்கொடுமை எதிா்ப்பு தினத்தையொட்டி மணவெளி சட்டமன்றத் தொகுதி தவளக்குப்பம்
புதுச்சேரி: உலக பெண்கள் வன்கொடுமை எதிா்ப்பு தினத்தையொட்டி மணவெளி சட்டமன்றத் தொகுதி தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் வன்கொடுமை விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
இந்த நிகழ்ச்சியில் வழக்குரைஞா் ஜெய மாரிமுத்து மற்றும் மகிளா சமன் பையா நிா்வாகி ஜெயந்தி ஆகியோா் பெண்கள் வன்கொடுமைக்கு எதிராக சட்ட ரீதியாக எவ்வாறு எதிா்கொள்வது என்றும் பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் மாணவிகளுக்கு விளக்கம் மற்றும் ஆலோசனை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பாஜக மாவட்ட மகளிா் அணி தலைவி மகேஸ்வரி, செயலா் லலிதா தொகுதி மகளிரணி தலைவி யோக பிரியா, பொதுச் செயலா் கலைச்செல்வி ஆகியோா் கலந்து கொண்டனா்.

