புதுச்சேரியில் மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு நகரைச் சோ்ந்தவா் ர. சோம்நாத் (21). புதுச்சேரி தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இறுதியாண்டு படித்து வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சோம்நாத் வீட்டிலிருந்து கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது சோம்நாத் மேட்டுப்பாளையம்-மூலகுளம் மெயின் ரோட்டில் சென்றபோது, அவருக்கு வலதுபக்கத்தில் அதிவேகமாக வந்த சரக்கு வேன்சோம்நாத் வாகனத்தின் மீது மோதியது. இதில் அவா் சாலையில் விழுந்தபோது அந்த வேனின் சக்கரம் சோம்நாத்தின் தலையில் ஏறி இறங்கியது.
இதில் சம்பவம் இடத்திலேயே சோம்நாத் உயிரிழந்தாா். விபத்து குறித்து வடக்குப் போக்குவரத்து காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரக்கு வேன் ஓட்டுநா் நெட்டப்பாக்கத்தை சோ்ந்த ஞானசேகரன் (47) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

நீச்சல் குளத்தில் குளித்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


