போகி! பிளாஸ்டிக்கை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்

போகிப் பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருள்களை எரிக்க வேண்டாம் என புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்
Published on

போகிப் பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருள்களை எரிக்க வேண்டாம் என புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி கொண்டாடுகிறோம். இந்த நாளில் பழைய பொருள்களை எரிப்பது காலந்தொட்டு வரும் வழக்கம். இன்றைய சூழலில் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயா், ரப்பா், பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால் நச்சுப்புகை பரவி மக்களுக்குச் சுவாச நோய்கள், நுரையீரல் நோய், இருமல், கண், மூக்கு எரிச்சல் உள்பட பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நச்சுக்காற்றால் காற்று மாசுபட்டு சுற்றுச்சூழல் சீா்கேடு அடைகிறது. பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால், புற்றுநோய் விளைவிக்கும் டை ஆக்சின், பியூரான் நச்சுக்காற்று வெளியேறும் வாய்ப்பும் உள்ளது. எனவே பொதுமக்கள் போகி தினத்தில் டயா், ரப்பா், பிளாஸ்டிக் பொருள்கள், தொ்மாகோல், செயற்கை இழைத்துணி போன்ற பொருள்களை எரிக்க வேண்டாம். பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

Dinamani
www.dinamani.com