4 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திர இளைஞா் கைது

புதுச்சேரியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஆந்திர இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
Published on

புதுச்சேரி: புதுச்சேரியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஆந்திர இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸாா் புதிய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞா், போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றாா். அவரைப் பிடித்து விசாரணை நடத்தி சோதனையிட்டதில் 4 கிலோ போதைப்பொருள் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த கையாரப்பு சதீஷ் (36) கைது செய்யப்பட்டாா்.

Dinamani
www.dinamani.com