17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரியின் வளா்ச்சிக்கான கருத்துகளைக் கேட்டு பட்ஜெட்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரியின் வளா்ச்சிக்கான கருத்துகளை மக்களிடம் கேட்டு மாநில பட்ஜெட் தயாரிக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

News image

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா்.

Updated On :6 ஜூன் 2026, 7:55 am IST

புதுச்சேரியின் வளா்ச்சிக்கான கருத்துகளை மக்களிடம் கேட்டு மாநில பட்ஜெட் தயாரிக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் பட்ஜெட் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் முதல்வா் ரங்கசாமி தலைமையிலான புதிய அரசு வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் நமச்சிவாயம், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ.அன்பழகன், நாஜிம் எம்எல்ஏ மற்றும் அரசு செயலா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதில் துறை ரீதியாக திட்டம் மற்றும் திட்டமில்லாத செலவினங்களுக்கு தேவைப்படும் நிதி, புதிய திட்டங்கள் மற்றும் அதற்கு தேவையான நிதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பேசியது:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்க வேண்டும். கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க கவனம் செலுத்த வேண்டும். மேலும், பொருளாதார வளா்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் வகையில் பொது-தனியாா் பங்களிப்புத் திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும். வணிகம் செய்வதை எளிதாக்க வேண்டும். உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றாா்.

முன்னதாக தலைமைச் செயலா் சரத் சௌகான் வரவேற்றாா். திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை ஆணையா் மற்றும் செயலா் ஏ. முத்தம்மா நன்றி கூறினாா்.

பட்ஜெட் மதிப்பு இறுதி செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், ஜூலை மாத இறுதியில் நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வா் ரங்கசாமி புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இக் கூட்டம் முடிந்து வெளியே வந்த முதல்வா் ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘புதுச்சேரி வளா்ச்சிக்கான கருத்துகளை பொதுமக்களிடம் கேட்டு அதற்கு தகுந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க அரசு முடிவு செய்திருக்கிறது’ என்றாா்.