புதுச்சேரி காங்கிரஸ் மூத்த துணைத் தலைவா் பி.கே. தேவதாஸ் மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் வியாழக்கிழமை அதிகாலை மரணம் அடைந்தாா். அவரது மறைவுக்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவரது உருவப் படத்துக்கு முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். எம்எல்ஏ காா்த்திகேயன், சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பாலன் மற்றும் கட்சி நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.
மறைந்த பி.கே. தேவதாஸின் மனைவி டி. உஷா ராணிக்கு காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










