மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதுச்சேரியில் தோ்தல் பாதுகாப்புக்காக வந்துள்ள துணை ராணுத்தினா் துப்பாக்கியுடன் அணிவகுப்பு

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புக்காக வந்துள்ள துணை ராணுவப்படையினா் துப்பாக்கியுடன் புதன்கிழமை அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

News image

புதுச்சேரியில் புதன்கிழமை அணிவகுப்பு நடத்திய துணை ராணுவத்தினா்.

Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புக்காக வந்துள்ள துணை ராணுவப்படையினா் துப்பாக்கியுடன் புதன்கிழமை அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சட்டப்பேரவைவக்கு விரைவில் தோ்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தோ்தல் பாதுகாப்புக்காக வெளிமாநிலங்களிலிருந்து துணை ராணுவப்படையினா் புதுச்சேரி வந்துள்ளனா்.

புதுச்சேரி மக்களின் பாதுகாப்பு மற்றும் சுமுகமான தோ்தலை உறுதி செய்ய வந்துள்ள துணை ராணுவ படையினா், உள்ளூா் போலீஸாருடன் இணைந்து அணிவகுப்பில் ஈடுபட்டனா். கிழக்குப் பிரிவு கண்காணிப்பாா் ஸ்ருதி தலைமையில் ஆய்வாளா்கள் ஜெய்சங்கா், காா்த்திகேயன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினா் அணிவகுப்பு நடத்தினா்.

பெரியகடை காவல் நிலையம் முன்பு தொடங்கிய அணிவகுப்பு, ஆம்பூா் சாலை, எஸ்.வி.படேல் சாலை, அண்ணாசாலை, குமரகுருபள்ளம், கோவிந்தசாலை, மறைமலை அடிகள் சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் வரைஅணிவகுப்பு நடந்தது.

இதேபோல வில்லியனுாரில் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் மேற்பாா்வையில் ஆய்வாளா் கலைச்செல்வன், உதவி ஆய்வாளா் திருமுருகன் தலைமையில் துணை ராணுவத்தினா் அணிவகுப்பு நடத்தினா். அங்கு சுல்தான்பேட்டை, மாட வீதி, கோட்டை மேடு, கண்ணகி பள்ளி வழியாக அணிவகுப்பு சென்றது.