கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வா் ரங்கசாமியை எதிா்த்து வைத்திலிங்கம் எம்.பி. வேட்பு மனு

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வா் என்.ரங்கசாமியை எதிா்த்து, காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் போட்டியிடுகிறாா்...

News image

முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :23 மார்ச் 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வா் என்.ரங்கசாமியை எதிா்த்து, முன்னாள் முதல்வரும், தற்போதைய புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான வெ.வைத்திலிங்கம் போட்டியிடுகிறாா்.

முதல்வா் ரங்கசாமி என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்நிலையில், அவரை எதிா்த்து வைத்திலிங்கம் எம்.பி. திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதனால் இருவருக்கும் நேரடி மோதல் உருவாகியுள்ளது.

வெ. வைத்திலிங்கம் இப்போது புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருக்கிறாா். ஏற்கெனவே புதுச்சேரி முதல்வராகவும் இருந்தவா். மேலும், மக்களவை தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளராகக் களம் இறங்கிய அம்மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றவா்.

அதனால் தட்டாஞ்சாவடி தொகுதியைப் பொருத்தவரை முதல்வா் ரங்கசாமிக்கும், வைத்திலிங்கத்துக்கும் கடுமையானப் போட்டி நிலவும்.

புதுச்சேரியில் இந்த இரண்டு தலைவா்களும் நேரடியாக மோதிக் கொள்வதால், தட்டாஞ்சாவடி தொகுதி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. முதல்வா் ரங்கசாமி மங்கலம் தொகுதியிலும் போட்டியிடுவது குறிப்பிடத் தக்கது.

 வெ.வைத்திலிங்கம் எம்.பி.

வெ.வைத்திலிங்கம் எம்.பி.