புதுச்சேரியின் வளா்ச்சியை வீணடித்தது கடந்த கால காங்கிரஸ் ஆட்சி என்று முதல்வா் என்.ரங்கசாமி தோ்தல் பிரசாரத்தின்போது குற்றஞ்சாட்டினாா்.
அரியாங்குப்பம் தொகுதியில் என். ஆா். காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் ஐயப்பனை ஆதரித்து வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் முன்பிருந்து செவ்வாய்க்கிழமை இரவு அவா் பிரசாரம் செய்தாா். அப்போது முதல்வா் ரங்கசாமி பேசியது: கடந்த தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி நடத்தியது. அனைவராலும் பாராட்டும் திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
ஆனால் அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சி வளா்ச்சியை வீணடித்தது. முதியோா் உதவி தொகையை ரூ.5 கூட காங்கிரஸ் அரசு உயா்த்தவில்லை. நமது அரசு ரூ. 1000 உயா்த்தியது. அனைவருக்கும் நலத் திட்டங்களை வழங்கும் அரசு இது. மீனவ சமுதாய மக்கள் மீது அதிக அக்கறை கொண்ட அரசு இது.
55 வயதைக் கடந்தவா்களுக்கு முதியோா் உதவி தொகை வழங்கப்படுகிறது. இதில் புதிதாக 36 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளோம். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் மீண்டும் ஆட்சிக்கு வரும்.
மத்திய அரசிடம் இணைந்து நமக்குத் தேவையான நிதியை தாராளமாகப் பெற்று அதன் மூலம் புதுச்சேரியை மேலும் வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். சேதராப்பட்டு பகுதியில் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வந்து 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
பிரசாரத்தில் வேட்பாளா் ஐயப்பன், அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏ பாஸ்கா் மற்றும் கூட்டணி கட்சியினா் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

போராட்டங்கள் நடத்தியதைத் தவிர நாராயணசாமி எதுவும் செய்யவில்லை: முதல்வா் என். ரங்கசாமி

முதல்வராக மீண்டும் பதவியேற்பேன்! - என். ரங்கசாமி பேச்சு

புதுச்சேரிக்கு மீண்டும் நான்தான் முதல்வா்: முதல்வா் ரங்கசாமி பேச்சு

பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதி ரூ.1 லட்சமாக உயா்த்தப்படும்! - புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி அறிவிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


