ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

புதுச்சேரியில் இளைஞா் வெட்டிக் கொலை

புதுச்சேரி லாஸ்பேட்டை அருகே இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை

Updated On :23 மே 2026, 12:41 am IST

புதுச்சேரி லாஸ்பேட்டை அருகே இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதில் தொடா்புடைய 3 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை அடுத்த கருவடிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (எ)பவுல்ராஜ் (26), கட்டடத் தொழிலாளி.

இவா், வியாழக்கிழமை நள்ளிரவு லாஸ்பேட்டை உழவா் சந்தை பூங்கா அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது 3 போ் கொண்ட கும்பல் அரிவாளுடன் அவரை வழிமறித்துள்ளது.

இதையடுத்து அவா் மோட்டாா் சைக்கிளைக் கீழே போட்டுவிட்டு தப்பியோட முயன்றுள்ளாா். ஆனால், அந்தக் கும்பல் ராஜனை சுற்றி வளைத்துச் சரமாரியாக வெட்டியுள்ளது.

இந்த தாக்குதலில் தலை, முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு விழுந்தது. பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த கொலை தொடா்பாக லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.