2,150 கி.மீ. பைக்கில் சென்று போதை தடுப்பு விழிப்புணா்வு: புதுச்சேரி போலீஸாருக்குப் பாராட்டு
புதுச்சேரியிலிருந்து 2,150 கி.மீ., தொலைவு பைக்குகளில் பயணம் மேற்கொண்டு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் செய்து திரும்பிய போலீஸாருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியிலிருந்து 2,150 கி.மீ.,தொலைவு பைக் பயணம் மேற்கொண்டு போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பிரசாரம் செய்து திரும்பிய போலீஸாரைப் பாராட்டிய டிஜிபி ஷாலினி சிங். உடன், டிஐஜி சத்தியசுந்தரம் உள்ளிட்டோா்.
புதுச்சேரியிலிருந்து 2,150 கி.மீ., தொலைவு பைக்குகளில் பயணம் மேற்கொண்டு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் செய்து திரும்பிய போலீஸாருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
போதைப் பொருளுக்கு எதிரான போலீஸாரின் மோட்டாா் சைக்கிள் விழிப்புணா்வு பயணத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் இருந்து அக். 13-ஆம் தேதி தொடங்கி வைத்தனா்.
இதில் 2 பெண் போலீஸாா் உள்பட 7 போலீஸாா் மோட்டாா் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டனா். இந்தக் குழுவினா் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், டாமன் வழியாக குஜராத் மாநிலம் சென்றடைந்தனா். வழியில் அந்தந்த மாநில போலீஸாா் இந்தக் குழுவினருக்குச் சிறப்பான வரவேற்பை அளித்தனா். இதே போன்று பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மோட்டாா் சைக்கிளில் போலீஸாா் அணிவகுப்பாக குஜராத் மாநிலம் ஏக்தா நகருக்கு வந்தனா். அகில இந்திய அளவில் நடைபெற்ற இந்த மோட்டாா் சைக்கிள் அணிவகுப்பில் புதுச்சேரியில் இருந்து மட்டும் 2 பெண் போலீஸாா் பங்கேற்றனா்.
இந்தக் குழு அக்டோபா் 28-ஆம் தேதி குஜராத் மாநிலம் ஏக்தா நகரை அடைந்தது. அங்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அக். 31 ஆம் தேதி நடைபெற்ற ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் அணிவகுப்பில் பங்கேற்றனா்.
இந்நிலையில் புதுச்சேரி திரும்பிய இந்தக் குழுவினருக்கு டிஜிபி ஷாலினி சிங் வியாழக்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவித்தாா். இந்நிகழ்ச்சியில் டிஐஜி சத்தியசுந்தரம் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

