விஜய்யும் ராகுலும் ஒன்றுசேர்ந்தால் பண பலம் வீழ்த்தப்படும்: ஆதவ் அர்ஜுனா

அடுத்து வரும் தேர்தல்களில் தவெக - காங்கிரஸ் கூட்டணி குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது பற்றி...

Rahul Gandhi | Vijay

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி | முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :

அடுத்து வரும் தேர்தல்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தவெக தலைவர் விஜய்யும் ஒன்றுசேர்ந்தால் பண பலம் வீழ்த்தப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் போட்ட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சக்ரவர்த்தி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, புதுச்சேரியில் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றால், தில்லியின் மூலமாகவோ ஆளுநர் மூலமாகவே செயல்படுத்தக்கூடிய முதல்வர் ஆட்சிதான் இங்கு இருக்கிறது. அப்படிப்பட்ட அரசியலமைப்பில் இருந்து அடுத்த கட்டத்துக்கு இதனைக் கொண்டுசெல்ல வேண்டுமென்றால், அதற்கு மாநில அந்தஸ்து வேண்டும். 2031-ல் தவெகவும் காங்கிரஸும் இணைந்து, புதுச்சேரியில் ஆட்சி அமைத்து, மாநில அந்தஸ்தை பெற்றுத் தரும்.

1967-ல் அண்ணா எப்படி தமிழகத்துக்கு மாநில சுயாட்சியை வழங்கினாரோ, அதேபோல புதுச்சேரிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வழங்கும். அதற்கான முதற்படிதான் வேட்பாளர் விநாயகத்தின் வெற்றி.

தமிழகத்தில் சாதி - மத அரசியலை வீழ்த்தி 108 இடங்களில் தவெக வெற்றி பெற்றுள்ளோம். தமிழகத்தில் மக்களாட்சி நடைபெற்று வருகிறது. பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்கள் எப்போதுமே தலைவர்களாக முடியாது.

தமிழகத்தில் பெண்களும் இளைஞர்களும் ஒன்று சேர்ந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். பணம், பொருள்களைக் கொடுத்து மக்கள் மனதை வெல்ல முடியாது.

வருகிற தேர்தல்களில் விஜய்யும் ராகுல் காந்தியும் ஒன்றுசேர்ந்து பிரசாரம் செய்தால், ஒட்டுமொத்த பண பலமும் வீழ்த்தப்பட்டு மக்கள் புரட்சி ஏற்படும். தவெகவும் காங்கிரஸும் அரசியல் கட்சிகளாக இணையவில்லை. இரு பெரும் சகோதரர்களாக இணைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

Summary

If TVK Vijay and Congress Rahul join forces in elections, money power will be defeated, says Minister Aadhav Arjuna

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.