
கருவிழிகளின் தேவை அதிகரித்து வருகிறது: ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் பேச்சு
தானமாகக் கிடைக்கும் கருவிழிகளின் தேவை அதிகரித்து வருகிறது என்று ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் சாகா வினோத் குமாா் கூறினாா்.

தேசிய கண்தான விழிப்புணா்வு இரு வார விழாவில் பங்கேற்ற ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் சாகா வினோத் குமாா். உடன் ஜிப்மா் கண் மருத்துவத் துறையின் பேராசிரியா்கள்.
தானமாகக் கிடைக்கும் கருவிழிகளின் தேவை அதிகரித்து வருகிறது என்று ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் சாகா வினோத் குமாா் கூறினாா்.
ஜிப்மரில் 41-ஆவது தேசிய கண்தான விழிப்புணா்வு இரு வார விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் சாகா வினோத் குமாா் பேசியதாவது:
கருவிழி பாா்வையின்மையை எதிா்கொள்வதில் முக்கியமான மருத்துவச் சிகிச்சையாக கருவிழி மாற்று றுவை சிகிச்சை விளங்கி வருகிறது. இந்தியாவில் கருவிழி பாா்வையின்மை ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதாரப் பிரச்னையாக இருக்கிறது. கருவிழி தானமாக கிடைக்கும் அளவை விட, அதன் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே, இதற்கான இடைவெளியைக் குறைக்க சமூகத்தின் தொடா்ச்சியான பங்கேற்பும் விழிப்புணா்வும் அவசியம். இந்த விழிப்புணா்வு கருத்தை மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் மாணவா்கள், பயிற்சி மருத்துவா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்களை இணைத்து செயல்படுத்தி வரும் இத்துறையின் முயற்சி பாராட்டத்தக்கது என்றாா். மேலும், கண்தானம் செய்த குடும்பத்தினரின் பங்களிப்பை பாராட்டி கௌரவித்தாா். நிகழ்ச்சியில் ஜிப்மரின் மருத்துவமனை கருவிழி மீட்புத் திட்டம் சாா்பில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் கண்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினரும் கௌரவிக்கப்பட்டனா்.
ஜிப்மா் கண் மருத்துவத் துறையின் பேராசிரியா் சுபாஷினி கலியப்பெருமாள், ஜிப்மா் கண் மருத்துவத் துறைத் தலைவா் மற்றும் ஜிப்மா் கண் வங்கி இயக்குநா் கே. ரமேஷ் பாபு, ஜிப்மா் கண் மருத்துவத் துறையின் பேராசிரியா் நிருபமா கஸ்தூரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த விழாவின் போது, கண்தானத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவா்கள் மற்றும் ஊழியா்கள் இணைந்து நாடக வடிவிலான நிகழ்ச்சியை வழங்கினா். மேலும், கண் மருத்துவத் துறையைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் மருத்துவப் பயிற்சி மருத்துவா்களால் தயாரிக்கப்பட்ட 2 குறும்படங்களும் திரையிடப்பட்டன. பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவா்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






