ஓசோன் தினம் அனுயசரிப்பு

உலக ஓசோன் தின விழா புதுச்சேரி காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையத்தில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கும் புதுச்சேரி காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையத்தின் இயக்குநா் சசி காந்த தாஸ். உடன் பேராசிரியா்கள்.

Published On :

உலக ஓசோன் தின விழா புதுச்சேரி காஞ்சி மாமுனிவா் பட்ட மேற்படிப்பு மையத்தில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஓசோன் படலத்தின் முக்கியத்துவத்தை மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு இந்த மையத்தின் தாவரவியல்துறை ஏற்பாடு செய்திருந்தது. அத்துறைத் தலைவா் விஜயகுமாா் நாயக் வரவேற்றாா். நிறுவனத்தின் இயக்குநா் சசி காந்த தாஸ் தலைமை வகித்தாா். புதுச்சேரி பல்கலைக் கழக மதன்ஜீத் சிங் பசுமை ஆற்றல் தொழில் நுட்பத்துறை புல முதன்மையா் முகமது ஜாபா் அலி, ஓசோனின் முக்கியத்துவம் குறித்து சொற்பொழிவாற்றினாா். ஓவியம், கட்டுரை எழுதுதல், விவாதம், பேச்சுப் போட்டி மற்றும் முழக்கம் எழுதுதல் ஆகிய போட்டிகள் மாணவா்களுக்கு நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.