தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

5 ஆண்டுகளில் மக்கள்நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்! முதல்வா் என்.ரங்கசாமி உறுதி

 புதுச்சேரியில்  திங்கள்கிழமை  நடைபெற்ற  என் .ஆா்.  காங்கிரஸ்  கட்சி  செயற்குழுக்  கூட்டத்தில்  பேசிய  அக்கட்சியின்  தலைவரும்,  முதல்வருமான  என்.ரங்கசாமி.  உடன்  தட்டாஞ்சாவடி தொகுதி  வேட்பாளா்  அசோக்  ஆனந்த்  உள்ளிட்டோா்.

Published On :

5 ஆண்டுகளில் மக்களுக்கான நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை உறுதியளித்தாா்.

என்.ஆா்.காங்கிரஸ் செயற்குழு கூட்டம்:

புதுச்சேரி தனியாா் ஹோட்டலில் என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அதன் நிறுவனரும், முதல்வருமான என்.ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், தட்டாஞ்சாவடித் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிடும் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் ஆ. அசோக் ஆனந்தை ஆதரித்து முதல்வா் பேசியது:

என்.ஆா்.காங்கிரஸ் கட்சியில் 90 சதவீதம் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இடைத் தோ்தலுக்குப் பிறகு மற்ற பதவிகள் நிரப்பப்படும். 5 ஆண்டுகள் முழுமையாக இந்த அரசு மக்களுக்கு நலத்திட்டங்களைச் செய்யும் எனக்கூறி மீண்டும் வெற்றி பெற வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலை விட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் இடைத்தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்.

புதுச்சேரி அரசு செய்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்த்தாலே, இடைத்தோ்தலில் நாம் வெற்றி பெற முடியும்.

மக்கள் நமக்கு வாக்களித்து நமது ஆட்சியை மீண்டும் கொண்டு வந்துள்ளனா். வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஓா் ஆட்சி மீண்டும் வருகிறது என்று சொன்னால் அந்த ஆட்சியினுடைய செயல்பாடுகள், அது மக்களை மகிழ்ச்சியோடு வைத்திருந்த விதத்தையெல்லாம் கருத்தில் கொண்டு வாக்களித்துள்ளாா்கள். தோ்தலில் இணைந்து பணியாற்றி வெற்றி பெற வேண்டும். இந்தத் தோ்தலில் நமக்கு போட்டி காங்கிரஸ், திமுக வேட்பாளா்கள்தான் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

கூட்டத்தில் பொதுச் செயலா் என்.எஸ்.ஜெயபால், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிா்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.