அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 3:13 am

தினமணி

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய காலாண்டுக்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
 பத்தாம் வகுப்பு (தோல்வி, தேர்ச்சி) மற்றும் அதற்கும் மேலான கல்வித் தகுதிகளைப் பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவைத் தொடர்ந்து புதுப்பித்து 30.09.2017 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறன் இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
 இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.12.2017 அன்றைய நிலையில் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
 இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தி மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி ரூ.300, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி ரூ.400 மற்றும் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு ரூ.600 என்றவாறு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
 உதவித் தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாகக் காண்பித்து, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பயன்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்.
 இந்த காலாண்டுக்கான உதவித்தொகை விண்ணப்பங்களை நவம்பர் 30-ஆம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப் பிரிவில் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.