மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செஞ்சி வடக்கு பார்த்த அம்மன் கோயில் தேரோட்டம்

செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள வடக்கு பார்த்த அம்மன் (எ) ரேணுகாம்பாள் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:10 am

DIN

செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள வடக்கு பார்த்த அம்மன் (எ) ரேணுகாம்பாள் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் பிரமோற்சவ விழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 21-ஆம் தேதி அம்மனுக்கு கூழ் வார்த்தலும், தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா  நடைபெற்றது. 
சனிக்கிழமை தீ மிதி திருவிழாவை முன்னிட்டு காலை  அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீ மிதித்தல் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
ஞாயிற்றுக்கிழமை காலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ரேணுகாம்பாள், ஸ்ரீமாரியம்மன், பரசுராமர் ஆகிய தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர், தேர் சக்கரத்துக்கு பூஜைகள் நடைபெற்று மஹா தீபாராதனைக்குப் பிறகு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
தேரை செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவரும், செஞ்சி நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான வி.ரங்கநாதன் வடம்பிடித்து இழுத்துத் தொடக்கி வைத்தார். இரவு ஊஞ்சல் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்ச விழா நிறைவு பெற்றது. 
விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா வி.பி.என்.சரவணன் தலைமையிலான சிறுகடம்பூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.