அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை கோரிக்கைப் பேரணி மேற்கொண்டனர்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினியுடன் கூடிய இணைய தள வசதி, மாவட்ட பணி மாறுதல், கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு பொறுப்பூதியம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நிருவாக அலுவலர் சங்கத்தினர் கடந்த வாரத்திலிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் வேலைநிறுத்தம் செய்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மேற்கொண்டனர்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி, மாவட்டச் செயலாளர் எஸ்.புஷ்பகாந்தன் தலைமையில் மாவட்டத்தில் 13 வட்டங்களில் பணியாற்றி வரும் கிராம நிருவாக அலுவலர் சங்கத்தினர், விழுப்புரம் சுதாகர் நகர், திருச்சி சாலை வழியாக பேரணியாக வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பதாகைகளுடன் கோஷங்களிட்ட அவர்கள், நிறைவாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். 300-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களின் மாவட்டத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தால், வருவாய்த் துறையில் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி

பிளாக்பஸ்டர் உறுதி! பாராட்டுகளைப் பெறும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்!

மொமினுல் - ஹசன் தமிம் அதிரடி: முதல் நாள் முடிவில் வங்கதேசம் 96 ரன்கள் சேர்ப்பு!

இன்றும், நாளையும் 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
விடியோக்கள்

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் முன் இருக்கும் WTC சவால்! | Gambhir | IND vs SL |


