விழுப்புரத்தில் 15-ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தமிழக கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினியுடன் கூடிய இணைய தள வசதி, மாவட்ட மாறுதல் ஆணை உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி
விழுப்புரம் மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கள்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு வட்டத் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். அன்பழகன், மணிபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.புஷ்பகாந்தன் கோரிக்கை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
முன்னாள் மாநில நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், பரமானந்தம் வாழ்த்துரை வழங்கினர். கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகோத்தபடி மனிதச் சங்கிலியாக நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களிட்டனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் வட்டங்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மனிதச்சங்கிலி போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் பெ.பெரியாப்பிள்ளை தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் த.பெரியதமிழன், வட்டத் தலைவர்கள் பெ.முருகன், ஜெ.ரஞ்சித்குமார், சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
வட்ட செயலாளர் மா.வரதராஜன், வட்ட பொருளாளர் அ.வினோத், வட்டத் தலைவர் மு.கருணாநிதி மற்றும் பர்கத்துனிஸா, அலமு, வசந்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்டிஏ ஊழலின் சின்னமாக விளங்குகிறது: கேரள உயர்கல்வித் துறை அமைச்சர்

தர்மன் போஸ்டர் மேக்கிங் விடியோ!

வீட்டில் எரிவாயு சிலிண்டர் இருக்கிறதா? ஜூலை 1 முதல் புதிய மாற்றம்! நல்ல செய்தியா?

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை: சி.பி. ராதாகிருஷ்ணன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


