சங்கராபுரம் அருகே சாராய வியாபாரியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள குறும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் ஏழுமலை (34). இவர், அந்தப் பகுதியில் சாராய விற்பனை மற்றும் மதுக் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸார் அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஏழுமலை ஈடுபடுவதைத் தடுக்க குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த ஏழுமலையை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









